நோவா nova Tamil Catholic Movie (Film)

நோவாவின் அறுநூறாம் வயதின் போது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது. ஆயினும் நோவா கடவுள் முன் மாசற்றவராய் இருந்ததால் அவரைத்தவிற மற்ற அனைவரையும் ஊழிவெள்ளத்தால் அழிக்க கடவுள் முடிவுசெய்து, நோவாவை ஒரு பேழை செய்யப்பணித்தார். அப்பேழையின் வழியாகக்கடவுள் நோவாவை காப்பாற்றினார். நோவாவுக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எரி பலி செலுத்தினார். அப்போது ஆண்டவர், “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.” என்று கூறி நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொண்டார் என விவிலியம் கூறுகின்றது.